தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் பதவி நீக்கம்: வர்த்தமானி ஊடாக ஆளுநர் அறிவிப்பு

🕔 February 1, 2021

லவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் பதவியில் இருந்து அசோக்க சேபால நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

குறித்த நகர சபையின் தலைவர் மீது அதன் உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் ஊடாக, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

அவர் நகரசபையின் தலைவர் என்ற அடிப்படையில் பணிகள் மற்றும் செயற்பாடுகளில் குற்றமிழைத்துள்ளமை உறுதியானதை அடுத்து> அவரை பதவி நீக்க தீர்மானித்ததாக அந்த வர்த்தமானியில் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Comments