அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலிச் செய்தி வெளியிட்டவர் கைது
சமூக ஊடகங்களில் அமைச்சர் அலி சப்றி தொடர்பில் போலி செய்திகளை பரப்பிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹான கூறியுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி தொடர்பான போலி செய்தியை சந்தேக நபர் ஒரு வானொலி நிலையத்தின் சின்னத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
போலி செய்திகள் சமூகத்தில் அமைதின்மையை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டவை எனவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.