குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

🕔 November 14, 2015

Mithiripa sirisena - 096வன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் விவகாரம் மற்றும் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதனை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்