துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய போது, நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை

🕔 January 18, 2021

முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை 2014ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்கும் போது நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட 03 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் குறித்த குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவரையும் தலா 10 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளம் பெறப்பட்டு அவர்களின் முன்னைய குற்றங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Comments