இந்தோனேசிய தீவில் நில நடுக்கம்: 26 பேர் பலி

🕔 January 15, 2021

ந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று வெள்ளிக்கிழமை 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதியளவு இடிந்த ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

இன்று இந்த பெரிய நிலநடுக்கம் நிகழ்வதற்கு சற்று முன்னர், லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

மோசமான நிலநடுக்கங்களும், சுனாமியும் பல முறை இந்தோனேசியாவைத் தாக்கியுள்ளன. 2018ம் ஆண்டு சுலவேசி தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 02 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

மம்ஜு நகரத்திலுள்ள மருத்துவமனையொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 06 நோயாளிகள், அவர்களின்குடும்பத்தினர், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்