அவதானம்; வீதி கீழிறங்கியுள்ளது

🕔 November 12, 2015

Road demaged - 013– க. கிஷாந்தன் –

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ஒரு பகுதி கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவுக்கும் நானுஓயாவுக்கும் இடையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் இவ்வாறு பாதை கீழ் இறங்கியுள்ளது.

இரு வழி பாதையான மேற்படி வீதியில் ஒரு பக்கத்தில் வீதியில் சுமார் 05 மீற்றர் நீளமான பகுதி கீழிறங்கியுள்ளதால், ஒரு வழியாக மாத்திரமே வாகனங்கள் பயணிக்கக் கூடியதாக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் வீதி கீழ்றங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந் வீதியில் மேலும் பல இடங்களில், சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.Road demaged - 011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்