மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

🕔 November 10, 2015

Ranil - 0988ட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திலக் மாரப்பன என்ன காரணத்துக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் எவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில், நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே திலக் மாரப்பன தனது பதவியை ராஜினாமா தெய்திருந்தார்.

இந்த தருணத்தில் எடுக்கப்படக் கூடிய மிகச் சிறந்த தீர்மானம் பதவியை ராஜினாமா செய்வதேயாகும் என, திலக் மாரப்பனவிற்கு தான் ஆலோசனை வழங்கியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்