இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

🕔 November 9, 2015

Gottabaya rajapakse - 098முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாவின் தலைமையில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும், ராஜபக்ஷக்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன் பிரகாரம், எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவராக தினேஸ் குணவர்தன செயற்பட்டு வருகின்றார்.

ஆயினும், இதன் திரை மறைவிலான உள்ளகத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ செயலாற்றி வருவதாகவும், இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்