சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின

🕔 December 10, 2020

– முன்ஸிப் அஹமட் –

ட்ட விரோதமாக பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை, நேற்று புதன்கிழமை தெஹியத்த கண்டி பிரதேசத்தில், கலால் திணைக்களத்தினர் கைது செய்தனர்.

கலால் திணைக்களத்தின் அம்பாறை மற்றும் கல்முனை அலுவலகத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, சட்ட விரோத பீடி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கலால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவி ஆணையாளர் தர்மசீலன் வழங்கிய அறிவுரையின் பிரகாரம், கலால் திணைக்கள அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் என். சுசாதரனின் வழிகாட்லுக்கிணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உதவிப் பரிசோதகர் அஸாட், கல்முனை அலுவலகப் பொறுப்பதிகாரி பி. செல்வகுமார், கலால் உத்தியோகத்தர்கள் எஸ். குகநேசன், ஜீவந்த, எல்.ஐ. துடுகல மற்றும் சாரதி லக்சிறு உட்ளிட்ட பலர் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களையும், பல லட்சம் பெறுமதியான சான்றுப் பொருட்களை தெஹயத்தகண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்