நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

🕔 November 9, 2015

Accident - Hatton - 01
– க. கிஷாந்தன் –

ட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றும், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாயின.

இவ்விபத்தில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் சென்ற பயணிகளில் 09 பேர், படுங்காயங்களுக்கு உள்ளான நிலையில், வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இவர்களில் 05 பேர் மேலதிக சிகிச்சைக்காக  நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.Accident - Hatton - 03Accident - Hatton - 02Accident - Hatton - 04

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்