மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு

🕔 November 29, 2020

ஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுவன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகம வைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

25 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றிரவு 9.55 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை சிறைச்சாலையில் பாரிய தீ மூண்டுள்ளதை காணமுடிவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

Comments