ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான்: பிணையில் விடுதலை

🕔 November 24, 2020

கொலைக் குற்றச்சாட்டில் கைதாகி, ஐந்து வருடங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவேநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் இன்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழங்கில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட பிள்ளையான், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் நான்கு பேருக்கும் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான், கடந்த பொதுத் தேர்தலில் சிறைக்குள் இருந்தவாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்