நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கப் பாடுபட்ட மூத்த பிரஜை சோபித தேரர் மரணம்; 12 ஆம் திகதி துக்க தினம்

🕔 November 8, 2015
Sobitha thero - 0900
ல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்துவதற்காக முன்னின்று உழைத்த, கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.

ஊழல்களுக்கு எதிராக, தேசிய அமைப்பின் அழைப்பாளராகவும் சோபித தேரர் கடமையாற்றியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை வீழ்த்தி, நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்குவதில் சோபித தேரர் முக்கிய பங்காற்றியவராவார்.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சோபித தேரர், மேலதிக சிகிச்சைகளுக்காக அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சோபித தேரரின் இறுதிக் கிரியை வியாழக்கிழமை

மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது பூதவுடல் இன்றிரவு 9.15 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அன்னாரது பூதவுடல் எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்ற மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரச மரியாதைகளுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

12ம் திகதி தேசிய துக்க தினம்

எனவே, எதிர்வரும் 12ம் திகதியை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மரணமடைந்தமாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள், அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை முன்னிட்டு அன்றைய தினத்தை  துக்கதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்