சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

🕔 November 10, 2020

சீனிக்கான மொத்த மற்றும் சிற்லறை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதன்படி பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கான சில்லறை விலை 85 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைமுறைக்கு வரும் வகையில் பாவைனையாளர் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஒரு கிலோ சீனி சில்லறையாக 140 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments