பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

🕔 November 6, 2015

Ranil - 01பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

வாய்மூல பதிலை எதிர் பார்த்து தொடரப்பட்ட கேள்வியின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி – கொழும்பு அதிவேக வீதியின் எஞ்சிய பகுதி வேலைகள் நிறைவுறுத்தப் படாமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும பல கேள்விகளை பெருந்தெருக்கள் அமைச்சரிடம் முன்வைத்தார்.

இதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் வழங்க முற்பட்ட போதே ஒலிவாங்கி செயலிழந்தது.

இதற்கான காரணம் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, பிரதமர் நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்