பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர்

பொன்சேகா தெரிவித்த தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரவுள்ளதாவும் நீதியமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவன்காட் விவகாரம் தொடர்பில் விஜேதாஸ ராஜபக்ஷ லஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.