இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

🕔 November 5, 2015

Jameel - 069
– எம்.வை. அமீர் –

லங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான  ஏ.எம். ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகப் பதவி வகித்த ஏ.எம். ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசில் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரசிலிருந்து ஜெமீல் நீக்கப்பட்டதோடு, அவரின் மாகாணசபை உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அபேட்சகராக ஜெமீலின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெமீலுக்கு வழங்குவதாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்திருந்தார்.

ஆயினும், ஜெமீலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே, அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அமைச்சின் கீழுள்ள, இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்