மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

🕔 November 3, 2015

Naseer - 0995
– அபு அலா –

கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும், சுகாதார, சுதேச வைத்தியத்துறையினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், தனது அமைச்சுக் கடமைகளை, திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அங்கு வருகை தந்திருந்தோர் மத்தியில் புதிய சுகாதார அமைச்சர் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“எமது முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, இந்த அமைச்சுப் பதவியினைப் பொறுப்பேற்றுள்ளேன்.

இந்த அமைச்சின் மூலம், கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும் சுகாதார, சுதேச வைத்தியத் துறையினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களுக்கும் பாரபட்சம் பாராது எனது சேவைகளை வழங்குவேன்” என்றார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி மற்றும் வீதி அமைச்சர் டபள்யூ.ஜி.எம். ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.

மேலும், அமைச்சின் உதவிச் செயலாளர்களான ஜே. ஹுசைனுதீன், பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். Naseer - 0994Naseer - 0993Naseer - 0991Naseer - 0992

Comments

புதிது பேஸ்புக் பக்கம்