மாடறுக்கத் தடை: பிரதமரின் யோசனைக்கு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

🕔 September 8, 2020

நாட்டில் மாடுகள் அறுப்பதைத் தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமைகாலை நாடாளுமன்றில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வது குறித்த திட்டம் ஒன்றை உருவாக்கலாம் என்றும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாடு அறுப்பதையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் தடை செய்ய வேண்டும் என்று 2014ஆம் ஆண்டிலிருந்து பொதுபல சேனா அமைப்பு பாரிய எதிர்ப்பு பிரசாரத்தை மேற்கொண்டிருந்தது.

பின்னர் நல்லாட்சி அரசாங்க காலத்தில், வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதின் ஊடாக நாட்டில் மாடறுப்பை தடை செய்வதற்குறிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும்படி, நிதி அமைச்சருக்கு தான் பணித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடந்த 2016ம் ஆண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்