மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை, எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்பான செய்தி: சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை