ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

🕔 August 31, 2020

டமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

Comments