சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

🕔 August 31, 2020

ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் நடந்த கொலை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு பிரேமலால் ஜயசேகரவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் – அண்மையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பிரேமலால் ஜயசேகர கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments