மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது
– எப். முபாரக் –
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பிரதேசத்தில் நபரொரு கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, மூன்று கிலோ கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பிடித்ததாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட 38 வயதுடைய சந்தேக நபரை தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.