2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

🕔 August 5, 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வாக்கெடுப்பு நிலையம் சுகாதார ரீதியாகப் பாதுகாப்பனது என்பதைக் காண்பிப்பதற்காகவே எனது 65 வயதிலும் வாக்களிக்க வந்தேன். ஆனால் வயது ஒரு பிரச்சினையல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இளைஞர்களை வாக்களிக்க வாருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். உங்கள் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்களை வாக்களிக்கச் செல்லுமாறு கூறுங்கள். வாக்கு என்பது உங்கள் பலமாகும்” எனவும் “அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க வாருங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments