புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

🕔 November 1, 2015

Begging - 01புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர் விஜய சமரசிங்க தெரி­வித்தார்.

புகை­யி­ரத பய­ணி­களின் பாது­காப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு ஏற்­படும் அசெ­ள­க­ரி­யங்­களை தவிர்ப்பதற்காவுமே, இவ்வாறான நட­வ­டிக்­கை­யினை இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட­ளா­விய ரீதியில் யாச­கர்­களின் தொல்­லைகள் அதிகரித்துள்ளன.

குறிப்­பாக புகை­யி­ரதம் மற்றும் புகை­யி­ரத நிலை­யங்­களில் யாசகம் செய்­வதால் பய­ணிகள் பலர் சிர­மங்­களை எதிர்நோக்குவதுடன் யாச­கர்கள் என்ற போர்­வையில் கொள்ளைச் சம்­ப­வங்­களும் இடம்­பெ­று­கின்­றனர். எனவே இவற்றை கட்டுப்படுத்தி பய­ணி­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய பாரிய பொறுப்பு எமக்­குள்­ளது.

குறிப்­பாக புகை­யி­ர­தங்­களில் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களும் பய­ணிக்­கின்­றனர். இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் புகையிரதங்களையும் மற்றும் புகை­யி­ரத நிலை­யங்­களின் சுற்றுச் சூழ­லையும் அழ­கா­கவும் சுத்­த­மா­கவும் வைத்­தி­ருக்க வேண்டும். இதற்கு யாச­கர்கள் பெரும் தடை­யாக இருக்­கின்­றனர். ஆகை­யால்தான் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ளத் திட்­ட­மிட்­டுள்ளோம்.

யாச­கர்­களின் தொல்­லையை கட்­டுப்­ப­டுத்த புகை­யி­ரத பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பொலி­ஸா­ருடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக புகையிரதங்களில் மற்றும் புகையிரத நிலையங்களில் யாசகம் செய்வோரை கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தபடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்