இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல்
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிடுகின்றனார்.
புலனாய்வுத் தகவல்களின் மூலம் கிடைத்த இந்த தகவல்களுக்கமைய, கடத்தப்படும் போதைப் பொருளில், 1000 கிலோகிராம் உள்நாட்டு பயன்பாட்டுக்காக விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறினார்.
ஏனைய 25000 கிலோ கிராம் போதைப் பொருட்களும் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட 52 நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.