அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

🕔 October 31, 2015

Hakeem - 01134
– முன்ஸிப் –

ட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அட்டாளைச்சேனைக்கு வாக்களிக்கப்பட்டமைக்கு இணங்க, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்பதை நான் மீளவும் உறுதிப்படுத்துகிறேன்.

தற்போது, மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நிச்சயமாக, நான் வாக்குறுதி வழங்கியவாறு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும்” என்றார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு இம்முறை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் யானைச் சினத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

இதனையடுத்து வெற்றிடமான கிழக்கு மாகாண கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினையே, கடந்த திங்கட்கிழமை ஏ.எல்.எம். நசீர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்