தங்கத்தில் முகக் கவசம்: அணிந்து அசத்தும் ஷங்கர்

🕔 July 6, 2020

ங்கத்தில் முகம் கவசம் ஒன்றை செய்து வாங்கி, அதனைப் பயன்படுத்தி வருகின்றார் இந்தியா – புனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் எனும் ஊரைச் சேர்ந்த ஷங்கர் குராடே என்பவர்.

இந்த முகக் கவசத்தின் மதிப்பு இலங்கை பெறுமதியில் 7.17 ரூபாயாகும்.

“கோலாப்பூரில் உள்ள ஒருவர் வெள்ளியில் முகம் கவசம் அணிந்திருந்தார். அதைப் பார்த்த நான் – தங்கத்தில் முகம் கவசம் அணிய விரும்பினேன்.

இது மிக மெல்லிய முகம் கவசம். சுவாசிப்பதற்கு ஏற்ற வகையில் சிறு துளைகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

எனக்கு தங்க ஆபரணங்கள் அணிந்து கொள்ளப் பிடிக்கும். மகாராஷ்ராவின் கோலாப்பூரில் வெள்ளி முகக் கவசம் தயாரிப்பது தெரிந்தவுடன், 55 கிராம் எடையுள்ள இந்த தங்க முகக் கவசத்தைச் செய்ய திட்டமிட்டேன்.

ஒரே வாரத்தில் இந்த முகக் கவசத்தை எனக்குச் செய்து கொடுத்தார்கள்.

தங்க முகக் கவசம் அணிவதால் கொரோனா தொற்றிலிருந்து காப்பற்றப்படுவேனா எனத் தெரியவில்லை. ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ள விதிகளைப் பின்பற்றினால், வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும்” என்றார் ஷங்கர் குராடே.

வீடியோ

Comments