நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ

🕔 October 30, 2015
Sajith premadasa - 01க்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படத் தேவையில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு அண்மையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் கடந்த முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக ஊடகம் ஒன்று அமைச்சர் சஜித்திடம் கருத்துக் கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, மக்கள் பிரதிநிதிகளுக்கு துப்பாக்கிகள் தேவையில்லை. அவ்வாறு வழங்குவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன் என்றார்.

மேலும், நான் இதுவரை துப்பாக்கிகள் பெற்றுக் கொள்ளவுமில்லை. இனியும் பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்