தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

🕔 June 30, 2020

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 06ஆம் திகதி காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 06 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

தேர்தல் நடவடிக்கை மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments