ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது

🕔 June 19, 2020

த்திய வங்கியால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிணைமுறிகள் ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கமையவே பிறப்பிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தன்னை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை ரத்துச் செய்யுமாறு கோரி முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ், சிரான் குணரத்ன மற்றும் யோசித ராஜகருணா உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மேலதிக விடயங்கள் தொடர்பான பரீசிலனை எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் என அறிவித்த நீதிபதிகள் அன்றைய தினம் வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்