போதைப் பொருள் வர்த்தகர்கள், தங்கச் சங்கிலி பறித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்

🕔 June 18, 2020

துபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேர், இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், புகையிரதங்களில் தங்க சங்கிலியை பறித்த ஒருவர் என பலர், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ரஞ்சன் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்ற 100 பேர், மணல் அகழும் அனுமதியை பெற்ற 75 பேர், போதைப்பொருளை கடத்தி வரும் இரண்டு பேர், குதிரை பந்தயம் நடத்தும் ஒருவரும் நாடாளுமன்றத்தில் இருந்தனர்.

புகையிரதங்களில் சங்கிலி பறித்த ஒருவரும் இருந்தார். இதுவே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்தவர்களின் தகுதி. இவ்வாறான நிலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோருகின்றனர்.

அதிகாரம் இல்லாத போதே இவர்கள் இப்படி செய்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினால் என்ன நடக்கும்” எனவும் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பினார்.

Comments