கொண்டை கட்டிய மைத்திரி

புகைப்படம் ஒன்றினூடாகவே, குறித்த கலைஞர் இதைச் சாதித்துள்ளார்.
உலக தலைவர்கள் சிலருக்கு கொண்டை இருப்பதுபோல் புகைப்படங்களை, ‘டிசைன் கிரவுட்’ எனும் குழுவினைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
மேற்படி ‘டிசைன் கிரவுட்’ கலைஞர்கள், போட்டோ ஷொப்பை பயன்படுத்தி உருவாக்கியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ. புஷ், ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின், வடகொரிய அதிபர் கிம் யோங் அன், பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் ஆகியோர் கொண்டை கட்டியிருப்பது போல், ‘ டிசைன் கிரவுட்’ கலைஞர்கள் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.
‘டிசைன் கிரவுட்’ குழு கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் புகழ்பெற்ற ஓவிய கலைஞரான சாலிய லியனாராச்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.