இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மைதான அபிவிருத்திக்காக, பிரதியமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

🕔 October 29, 2015

Harees MP - 01
– எஸ். அஷ்ரப்கான் –

றக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்காக, 01 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இதற்கான நிதியினை விளையாட்டுத்துறை அமைச்சினூடாக ஒதுக்கியுள்ளார்.

இதனையடுத்து, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நேற்று புதன்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்குச் சென்று, குறித்த மைதானத்தினை நேரடியாக பார்வையிட்டார்.

இதன்போது, பாடசாலை அதிபர் எஸ்.எம். இஸ்மாயில், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யூ.கே. ஜாபீர், இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். நஸீர் உள்ளிட்டோர் சமூகமளித்திருந்தனர்.

குறித்த நிதியைக் கொண்டு ஒரு மாத காலத்தினுள் மைதானத்தை அபிவிருத்தி செய்து வேலையை முடிவுறுத்துமாறு, இதன்போது பிரதியமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்