நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

கட்டுகுருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமில் கடந்த இரு நாட்களாக இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் நாடாளுமன்றுத்குத் தெரிவாகியுள்ள 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சுடும் பயிற்சி, வெற்றிகரமாக நடைபெற்றதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமக்கு வழங்கப்படும் பழைய ரகத் துப்பாக்கிகளுக்குப் பதிலாக, புதிய ரகத் துப்பாகிக்களை வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.