பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை; ஜே.வி.பி அறிவிப்பு: எதிர் கட்சிகளும் அதே நிலைப்பாடு

🕔 May 1, 2020

லைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள நிலையில், தான் உள்ளிட்ட தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான இந்த சூழ்நிலையை சமாளிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட்ட வேண்டும் அல்லது தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கேட்கப்பட வேண்டும் என்றும் அநுரகுமார திசாநாயக்க அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நான்காம் திகதி முற்பகல் 10 மணிக்கு அலறி மாளிகையில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு, கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போது எதிர்த்தரப்பிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், பிரதமர் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என, தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக, ‘ராவய’ செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்