கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

🕔 October 26, 2015

Naseer - 0002
– பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக ஏ.எல்.எம்.நசீர் இன்று திங்கட்கிழைமை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கல்வியமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி ஆகியோருடன் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.

அவர் வகித்த அமைச்சுப் பதவினையே, தற்போது நசீர் பொறுப்பேற்றுள்ளார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்த நசீர், அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரானார்.

ஆயினும், ஒரு வருடம் மட்டுமே மேற்படி தவிசாளர் பதவியினை வகித்த நிலையில், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட இவர், அதில் வெற்றிபெற்றார்.Naseer - 0001Naseer - 0003

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்