கொரோனாவினால் 18 லட்சம் வரையிலானோர் பாதிக்கப்படக் கூடும்: விஞ்ஞானிகள் சங்கம் எச்சரிக்கை

🕔 March 27, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் 18 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கக்கூடும் என லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் பூராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலேயே இதனை அந்தச் சங்கம் கூறியுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் என்பவற்றினை கடைப்பிடிப்பதன் மூலம் பல லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் 24,089 பேர் உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Comments