குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதி

🕔 October 26, 2015

Wasp - 01– க. கிஷாந்தன் –

லிந்துலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை  காலை, நாளாந்த பணிக்குச் செல்லும் போது 10ம் இலக்கம் கொண்ட தேயிலை மலையில் வைத்தே, குளவித் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதில் பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

இதில் 03 பேர் வைத்திய சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 07 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியாலையில் இல்லாமையினால்,  தேவையான மருந்துகளை, மருந்துக் கடைகளில் பெற்றுக்கொள்ளுமாறு, வைத்தியசாலையில் கூறியுள்ளனர். இதனால், ஏழைத் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்