கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகிறார் நசீர்; ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம்

🕔 October 26, 2015

Naseer - 012– முன்ஸிப் –

கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், மாகாண சுகாதார அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

மு.காங்கிஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் உத்தரவுக்கிணங்கவே, கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராக, ஆளுநர் முன்னிலையில் நசீர் பதவியேற்கவுள்ளார்.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மு.கா. சார்பில் அம்பாறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஏ.எல்.எம். நசீர், 18 ஆயிரத்து 327 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.

அவர் வகித்த அமைச்சுப் பதவினையே, தற்போது நசீர் பொறுப்பேற்கவுள்ளார்.

இவ் விடயம் குறித்த மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

Comments