பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு

🕔 October 25, 2015

லைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலை­வர்கள் மற்றும் உறுப்பினர்கள் சபை­களின் நிருவாகத்தில் தலையீடு செய்தல், முன்­னைய பதவி வழி­யாக அதிகாரத்தை நிலை­நி­றுத்த
முற்படுதல் என்பவற்றை முற்­றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே­போன்று பதவிழந்த Circular - 0222உறுப்பினர்களுடன் எந்­த­வ­கை­யான தொடர்­பு­க­ளையும் அதி­கா­ரிகள் வைத்­துக்­கொள்­ளக்­ கூடாது என, உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.

உள்­ளுராட்சி சபை­களின் நிர்­வாகமானது, மாகாண சபை­களின் நிருவாகத்துக்கு உட்பட்டதாக இருந்த­போ­திலும், பத­வி­யி­ழந்த தவிசாளர்கள் மற்றும் உறுப்­பி­னர்­களின் தலை­யீ­டுகள் மறைமுமாக உள்ளுராட்சி சபை­களின் தற்­போ­தைய நிர்­வா­கத்தில் இருப்­பது அவதானிக்கப்பட்டது.

இத­னை­ய­டுத்து, குறித்த செயற்­பாடு தொடர்பில் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு விசேட சுற்­ற­றிக்கை மூலம் மேற்படி அறி­வு­றுத்­தலை விடுத்துள்ளது.

பத­வி­யி­ழந்த உள்­ளூ­ராட்சி சபை­களின் தவி­சா­ளர்கள் மற்றும் உறுப்­பி­னர்களின் பத­விக்­காலம் முடிந்த பின்­னரும், இவர்கள் உள்ளுராட்சி சபை­க­ளுக்கு சென்று தமது பத­விக்­கா­லத்தில் மீதமாகவி­ருந்த பணி­களை நிறை­வேற்ற முற்­ப­டு­வ­தோடு, தேர்தல் நடை­பெ­றும்­போது தாங்கள் மீண்டும் அதே பத­விக்கு வருவோம் எனக் கூறி, உள்­ளூ­ராட்சி சபை­களில் கட­மை­பு­ரியும் அதிகாரிகளை மிரட்டி காரி­யங்­களை சாதிக்க முற்­ப­டு­வ­தாக அமைச்­சுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த சுற்றறிக்கையினை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்