ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 March 6, 2020

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்குடன் இவர்கள் தொடர்புபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்,பெர்பேசுவல் ரெசரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்குடன் தொடர்புபட்ட பல சந்தேக நபர்களுக்கு எதிராக, பிடியாணையைப் பெறுமாறு சட்டமா அதிபர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

Comments