ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

🕔 March 4, 2020

க்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் கூட்டணியாகவும், ரணில் தலைமையிலும் போட்டியிடும் ஒரு நிலைவரம் உருவாகியுள்ள நிலையில் இந்த ராஜிநாமாவை அகில அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசிகளில் ஒருவராக அறியப்பட்டவர் அகிலவிராஜ் காரியவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments