வற் (VAT) வரியை நீக்க, அரசாங்கம் முடிவு

🕔 October 24, 2015
VAT - 01ற் (VAT – Value added tax) எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக்குப் பதிலாக, முன்னர் நடைமுறையிலிருந்த வணிக வரியை மீளவும் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளததாகத் தெரிவிக்கப்படுறது.

வற் வரி அறவிடும் நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் காரணமாக, அரசாங்கத்துக்கு பெரும் வரி இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் வற் வரியினை ஒரே தடவையில் அறவிடப்படுவதன் காரணமாக வர்த்தகர்களும், பொது மக்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

இதனை தவிர்க்கும் வகையில், வர்த்தகத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளின்போதும் சிறு சிறு வரிகளாக, வணிக வரியை மீள அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறை மிக விரைவில் செயற்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கான சிபாரிசுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் அண்மையில் நிதியமைச்சரிடம் கையளித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்