பற் சிசிச்சை முகாம்
– நர்சயன் –
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பற் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது.
‘வேல்ட்விஷன்’ நிறுவனத்தின் நாவிதன்வெளிப் பிராந்திய அலுவலகம் – இச் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 240 மாணவர்கள், இங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.
இதன்போது, தரம் 01 தொடக்கம் 11 ஆண்டு வரையான அனைத்து மாணவர்களின் பற் சுகாதாரம் பரிசோதிக்கப்பட்டதுடன், சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.