தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம்

🕔 February 4, 2020

லங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்தது.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது.

இதன்போது பீடாதிபதிகள்இ துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழுவினரால் சுதந்திர தினத்திற்கான மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. அடுத்த நிகழ்வாக பல்கலைக்கழகத்தின் கிழக்குப் புறத்தில் அமைந்திருக்கும் விரிவுரையாளர்களுக்கான விடுதிக்கு அருகாமையில் சுதந்திர தினத்தினை கௌரவிக்கும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது.

‘ஒரு பாதுகாப்பான தேசம் – ஒரு வளமான நாடு’ எனும் கருப்பொருளில் கொண்டாடப்படும் இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தினர்கள் மிக மகிழ்சியுடன் பங்கேற்றனர்.

(பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு)

Comments