கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது

காலாவதியடைந்த கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதாகியுள்ளார்.
ஐரோப்பாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை விமல் வீரவங்ச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தார்.
இதன்போது, காலாவதியான கடவுச்சீட்டை வைத்திருந்தமை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
பின்னர், மற்றுமொரு வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
அந்தவகையில் விமல் வீரவன்சவிடம் இரண்டு கடவுச் சீட்டுக்கள் இருந்துள்ளன.
இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் – குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினைக் கைது செய்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய, சபை முதல்வர் லக்ஷ்மண் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, காலாவதியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், பிரதமரின் தலையீட்டுடன் அவரது விஜயத்திற்கான சட்ட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.