புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

🕔 October 22, 2015

Student - 02
– அஸ்ஹர் இப்றாஹிம் –

மிகவும் குறைந்த செலவில் மா அரிக்கும் இயந்திரமொன்றை  சாய்ந்தமருது பிரதேச மாணவர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ.எம்.எம். சௌபாத் எனும் மாணவரொருவரே, சூழலுக்கு கழிவாக அகற்றப்படும்பொருட்களை பயன்படுத்தி, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் இந்த இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.எம். சௌபாத் என்ற மேற்படி மாணவர், புத்தாக்கம் மூலம்  ஏதாவது பிரயோசனப்படுத்தக் கூடிய இயந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டுமென, தனக்குள் உதித்த யோசனையின் அடிப்படையில் இந்த – மா அரிக்கும் இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார்.

வகுப்பு நண்பர்களின் உதவியும், தொழில்நுட்ப பிரிவு ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தனது முயற்சிக்கு உதவியதாக மாணவர் சௌபாத் கூறுகின்றார்.

மேற்படி இயந்திரத்தினை உருவாக்குவதற்காக சூழலுக்கு கழிவாக வீசப்படும் பழைய மரத்துண்டுகள், ஆணிகள , வயர்கள், கணிணியின் அடிச்சட்டம், கம்பிகள் மற்றும் பால்மா வெற்றுப் பெட்டி ஆகியவற்றினை பயன்படுத்தி தயாரித்துள்ள இந்த மா அரிக்கும் இயந்திரத்தை, powerpack மூலம் வழங்கும் மின்சாரம் மூலம் இயக்க முடிகின்றது.

இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு, தனக்கு வெறும் நூறு ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளதாகதெரிவித்த இம் மாணவர், எதிர் காலத்தில் இந்த முயற்சியினை மேலும் விரிவுபடுத்தி உள்ளுர் சந்தைகளில் இதனை விற்பனைக்கு கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.

இம்மாணவனின் முயற்சியினை இக் கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன், உயர்தர தொழில்நுட்ப பிரிவு பகுதித் தலைவர் ஏ. ஆதம்பாவா, பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டியதோடு, இவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெறவும் ஆசி வழங்கியுள்ளனர்.Student - 03Student - 01

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்