ஒலுவில் துறைமுகத்தினை விரைவில் அபிவிருத்தி செய்ய தீர்மானம்

🕔 October 22, 2015
Ports - Oluvil - 01
லுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஒன்றிணைந்த செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுக அபிவிருத்தி அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியன இணைந்து, இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை துறைமுக அபிவிருத்தி அமைச்சில், அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.

வர்த்தக மற்றும் மீன்பிடித்துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒலுவில் துறைமுகம் 1998ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்டது.

எனினும் அவரின் மறைவுக்குப் பின்னர் குறித்த துறைமுக அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்தத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை மீண்டும் முன்னெடுத்துள்ளார்.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின், மீன் ஏற்றுமதித் தடை விரைவில் நீக்கப்படவுள்ள நிலையில், ஒலுவில் துறைமுகம் செயற்பாட்டுத் திறன்மிக்க துறைமாக இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.Ports - Oluvil - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்