வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் ராஜிதவின் ஊடக சந்திப்பில் பேசியவர்கள் கைது

🕔 December 14, 2019

டந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்த இருவரையும், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வௌ்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் மேற்குறித்த இருவரும் பல அதிர்ச்சியூட்டும்  தகவல்களை வெளியிட்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது, வெள்ளை வேன் கடத்தல் விவகாரத்தில் தொடர்புபட்டிருந்ததாக மேற்படி நபர்கள் இருவரும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.

மேலும், கடத்தப்பட்டு கொல்லப்படும் நபர்கள் முதலைகளைளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டதாகவும் இவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ராஜிதவும் கலந்து கொண்டருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments